ஆடி மாதம் மற்றும் முகூர்த்த தினங்கள் இல்லாததால் திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை பாதியாகக் குறைந்துள்ளது. திண்டுக்கல் மையப் பகுதியிலுள்ள காய்கறி சந்தைக்கு நாள்தோறும் அதிக அளவில் விற்பனைக்காக காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில், ஆடி மாதம் மற்றும் முகூர்த்த தினங்கள் இல்லாத காரணத்தால் காய்கறிகளின் விலை பாதியாக குறைந்துள்ளது.
கடந்த நாட்களில் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை ஆன வெங்காயம் 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது இதேபோல கத்தரிக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், தக்காளி 27 ரூபாய்க்கும், கொத்தமல்லி 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 32 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.