நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல நினைக்கமாட்டார்கள் – பக்தி பாடகர் வீரமணி ராஜூ

நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல நினைக்கமாட்டார்கள் என பக்தி பாடகர் வீரமணி ராஜூ தெரிவித்துள்ளார்.

சபரிமலை மாண்பை காக்க வலியுறுத்தி, வடபழனி ஐயப்ப பக்தர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜூ மற்றும் வீரமணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் வீரமணி ராஜு, சபரிமலையை பொறுத்த வரை ஐயப்பன் திருமணம் ஆகதவராக இருப்பதால் தான் அங்கு பெண்கள் வர கூடாது என்றும், அது ஐயப்பனே செய்த வரையறை எனவும் தெரிவித்தார்.

 

 

Exit mobile version