வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளதால் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பாகிஸ்தான், சைபீரியா, இந்தோனேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர்ண நாரை, கூழைக்கடா, அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி, பாம்புத்தாரா உள்ளிட்ட பறவைகள் வருவது வழக்கம்.
26 வகையான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.இந்த ஆண்டு ஏரியில் குறைந்தளவு நீரே உள்ளதால் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.