விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்

மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும் விழுப்புரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதே போல விழுப்புரம் தொகுதியில் எழுத்தாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்

Exit mobile version