வர்மா டூ ஆதித்யா வர்மா – கடந்து வந்த பாதை!

பாலா இயக்கத்தில் ரீமேக்காகி கைவிடப்பட்ட “வர்மா” திரைப்படம் இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வர்மா, ஆதித்ய வர்மா கடந்து வந்த பாதையை பார்ப்போம்..

 

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ்வின் அறிமுக படமாக தயாரிக்க முன் வந்தது E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். “வர்மா” என்று பெயரிடப்பட்டு, அந்த படத்தை பாலா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. பாலாவும் படம் எடுத்தார். ஆனால் அதனை பார்த்த நடிகர் விக்ரமும், தயாரிப்பு நிறுவனம், பாலாவின் இயக்கத்தில் அதிருப்தி அடைந்தனர். இதனால் வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்து தமிழ் திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்தது தயாரிப்பு நிறுவனம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலா, படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைதொடர்ந்து அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரீஸ்சையா இயக்கத்தில், நடிகர் துருவ்வுடன், புதிய டீம்மை வைத்து “ஆதித்ய வர்மா” என்று தயாரானது. கடந்தாண்டு வெளியான ஆதித்ய வர்மா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

கலவையான விமர்சனங்களையும், வர்த்தக ரீதியில் சுமாரான படமாகவே ஆதித்ய வர்மா அமைந்தது. இந்த நேரத்தில் தான் பாலா இயக்கி பெட்டிக்குள் பூட்டப்பட்ட வர்மா-வை ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. simply south என்ற ஓடிடி நிறுவனம், பாலாவின் வர்மாமை தனது தளத்தில் வெளியிட்டது.

பாலாவின் வர்மாவிற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ரீமேக் செய்யப்பட்ட இரண்டு படங்களுமே அர்ஜூன் ரெட்டி ஏற்படுத்திய தாக்கத்தை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தவில்லை. தமிழ் திரையுலகில் ஒரே படத்தை 2 முறை தயாரித்து வெளியிட்ட பெருமையை பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம், 2 பதிப்புமே சுமார் ரகம் என்ற பேரையும் பெற்று விட்டது. ஆக ரீமேக் என்ற பெயரில் தங்கள் மனதை மாறிமாறி புண்படுத்திவிட்ட கோபத்தில் உள்ளனர் அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள்.

Exit mobile version