புதிதாக பெட்ரோல் நிலையங்கள் தொடங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

புதிதாக பெட்ரோல் நிலையங்கள் தொடங்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்துள்ளது.

அதன்படி, அதிக நிலத்தடி நீர் மட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகள், நிலத்தடி நீர் மற்றும் மண் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், இரட்டை சுவர் தொட்டிகள் அல்லது கான்கிரீட் பாதுகாப்பு சுவர்களை கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பீப்பாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கசிவுகளைக் சரிபடுத்தும் வரை அந்த விற்பனை நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மண் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பையும் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும், புதிய பெட்ரோல் பங்குகள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தள்ளியே அமைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version