மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம் என்பதாலே அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகளும் விரும்புவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தை அடுத்த பாவந்தூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று சொன்னவர்கள் எல்லாம், அதிமுகவை தேடி வருவதாக குறிப்பிட்டார். மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம் என்பதாலே, அதிமுகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் விரும்புவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.