தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை முதல் வடசென்னை வரை….!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இன்றைய தினம் தனது 380வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இன்றளவும் ஒருமுறையாவது சென்னைக்கு ஒருநாள் சென்றுவிட வேண்டும் என நினைக்கும் மக்கள் உள்ளனர். அவர்களின் எண்ணத்திற்கு அடிப்படை காரணங்களில் ஒன்றாக திகழ்வது திரைப்படங்கள். எத்தனையோ படங்கள் சென்னையை மையமாக வைத்து வந்தாலும் சென்னையை குறிப்பிட்டு வெளிவரும் பாடல்கள் மிகக்குறைவு தான். சென்னையின் அடையாளம் கானா பாடல்கள் என்றால் சில பாடல்கள் சென்னையின் பல அடையாளங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

1.அனுபவி ராஜா அனுபவி – “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்”

1967 இல் வெளியான அனுபவி ராஜா அனுபவி படத்தில் இடம்பெற்ற மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் அன்றைய காலகட்டத்தில் இருந்த சென்னையும் அதன் நாகரிக வளர்ச்சியையும் பாடல் வரிகளில் வெளிப்படுத்தியது. மேலும் நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள் குறித்தும் சாலைகளில் மரங்களே இல்லாத நெருக்கடியான நிலைகள் குறித்தும் பாடல் வரிகள் மூலமாக சொல்லியிருப்பார்கள்.

 காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=UMzW_hrs2Us

2.மே மாதம் – “மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்”

1994இல் வெளியான மே மாதம் திரைப்படத்தில் இடம்பெற்ற மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் பாடல் மெட்ராஸின் பெருமைகளை பேசியது என்று சொல்லலாம். குறிப்பாக கோடம்பாக்கம், மீனம்பாக்கம், பர்மா பஜார், ஜாம் பஜார் போன்ற இடங்கள் குறித்தும், சென்னையின் ஹீரோவாக மெட்ரோ வாட்டர், அனைத்து மதங்களும் இந்தியனாக வாழும் ஊராக சென்னையை சித்தரித்து இருப்பார்கள்.

  காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

3.அள்ளித்தந்த வானம்- “சென்னைப்பட்டினம்”

2001 ஆம் ஆண்டு வெளிவந்த அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் இடம்பெற்ற சென்னைப்பட்டினம் பாடல் சென்னையில் தொட்டதற்கெல்லாம் காசு என்பதை சொல்லாமல் சொல்லியது.

 காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=0uWye0E-XO0

4.மதராசப்பட்டினம் – “வாம்மா துரையம்மா”

2010ல் வெளியான இந்த திரைப்படம் முழுக்க சுதந்திரத்திற்கு முந்தைய சென்னையை கண்முன்னே கொண்டுவந்தது என்றாலும், இந்த பாடலில் சென்னையில் ட்ராம் வண்டி, சென்ட்ரல் ரயில் நிலையம் , கூவம் நதி, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

 காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=BgquRVu1i-w

4. மெரினா- “வணக்கம் வாழவைக்கும் சென்னை”

2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் இடம்பெற்ற வணக்கம் வாழவைக்கும் சென்னை பாடல் சென்னையின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தியது. வெளியூரில் இருந்து சென்னைக்கு மனமில்லாமல் வந்திருக்கும் அனைவருக்கும் இங்கிருக்கும் விஷயங்கள் எப்படி அவர்களை சென்னையை விட்டுப் பிரியாமல் வைத்திருக்கிறது என்று பாடல் மூலம் சொல்லி இருப்பார்கள்.

 காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=eYqYzUBjYbs

5.வணக்கம் சென்னை- “சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்”

2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தில் இடம்பெற்ற சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் பாடல் தற்போதைய தலைமுறையில் பிரபலம் அடைந்தது. குறிப்பாக மும்பையும் சென்னையும் ஒப்பிட்டு இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கும். எல்ஐசி பில்டிங், மெரினா பீச், சாப்பாடு வகைகள்,சூப்பர் ஸ்டார் ரஜினி, நட்பு என அனைத்தையும் ஒப்பிட்டு இருப்பார்கள்

 காணொளியில் காண:https://www.youtube.com/watch?v=hAn75DAONqs

6.மெட்ராஸ் – “எங்க ஊரு மெட்ராஸ்” 

2014-ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற எங்க ஊரு மெட்ராஸ் பாடல் ஆகட்டும் , சென்னை வடசென்னை பாடலாகட்டும் சென்னையில் மற்றொரு முகமாக பார்க்கப்படும் வடசென்னையின் வாழ்க்கை முறையை சினிமா ரசிகர்களுக்கு எடுத்துரைத்தது.

காணொளியில் காண: https://www.youtube.com/watch?v=XJEEBqLG134

 7. “சென்னை 375” ஸ்பெஷல் ஆல்பம் – “சான்ஸே இல்ல…”

அதே 2014 ஆம் ஆண்டு சென்னையின் 375வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் சான்சே இல்லை என்கிற பாடல் வெளியானது. இது முழுக்க முழுக்க சென்னையின் பெருமைகளை பற்றி பேசியது. மயிலாப்பூர் டிகிரி காபி, பாடிகாட் முனீஸ்வரன், பெசன்ட் நகர் பீச், கோடம்பாக்கம், டி நகர், ஈசிஆர், ஓ எம் ஆர், என சென்னையை அங்குலம் அங்குலமாக ரசிக்க வைத்தது அதன் பாடல் வரிகள்.

காணொளியில் காண:  https://www.youtube.com/watch?v=VKMyYO2g6Fc

 

Exit mobile version