திருச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: இறந்த 8 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி

திருச்சி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே கிணற்றில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காயமடைந்த 9 பேருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தவிட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்தை காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version