வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அங்கு, தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதலாவது அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த எட்டாம் தேதி, 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அனல்மின் நிலைய அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த நிலையில், ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக, மூன்றாவது அளகில், 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version