இமயமலையின் 4 சிகரங்களுக்கு வாஜ்பாயின் பெயர்

இமயமலையின் 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கங்கோத்ரி அருகே அமைந்திருக்கும் 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 566 மீட்டர் உயரம் வரையிலான 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் ஒன்று, வாஜ்பாய் 2, வாஜ்பாய் 3, வாஜ்பாய் 4 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தச் சிகரங்களில் ஏறி மூவர்ண கொடியை ஏற்றிய குழுவின் தலைவரும், நேரு மலையேற்ற கல்வி நிறுவனத்தின் முதல்வருமான அமித் பிஷ்த், வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

Exit mobile version