வறுமையில் உள்ளவர்கள் வாழ்க்கை முன்னேறுவதற்கே இலவச திட்டங்கள் – அரசியலுக்காக இலவச திட்டங்களை விமர்சனம் செய்கின்றனர் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்

அரசின் இலவச திட்டங்கள் அரசியலுக்காக விமர்சிக்கப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரசுராமன், பாரதிமோகன் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், இலவச திட்டங்கள், வறுமையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக வழங்கப்படுவதாக கூறினார். ஒரு சிலர், அரசியலுக்காக இலவச திட்டங்களை விமர்சனம் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

 

 

Exit mobile version