23 ஆண்டுகளுக்குப் பின்னர் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் குடமுழுக்கு விழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இங்கு அரசின் வழிமுறைகளை பின்பற்றி, 23 ஆண்டுகளுக்கு பின்னர் யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா கடந்த 25ம் தேதி தொடங்கியது.
இதற்காக 147 யாக குண்டங்கள் 8 கால பூஜைகள் நடைபெற்றன.
இன்று 8வது கால பூஜை நிறைவடைந்த பின்னர், கடங்கள் புறப்பாடு சேவையும், அதனைத்தொடர்ந்து குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க, ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
பின்னர் மகாதீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தேறின.