வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், நாளை 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

வைத்தீஸ்வரன் கோயிலின் நான்கு ரத வீதிகள், சன்னதி தெருக்கள் மற்றும் கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களில் 4 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு10 மணி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version