ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருவாரூர் மவாட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில், பகல்பத்து உற்வசத்தின் மூன்றாம் நாளான நேற்று, பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி ஆழ்வார்களுக்கு காட்சியளித்தார்.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து, இராபத்து என 20 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பகல் பத்து உற்வசத்தின் மூன்றாம் நாளான நேற்று, ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். பெருமாள், ஆழ்வார்கள் சன்னதி முன்பு நின்றபோது, 12 ஆழ்வார்களுக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது. பட்டத்து கிரீடம் சூடி வந்த ராஜகோபால சுவாமியை பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Exit mobile version