ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான உரிய அமைப்பிடம் முறையிடுங்கள் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version