சாதிக் பாஷா மரணத்திற்கு திமுகவிடம் நியாயம் கேட்பாரா வைகோ?

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், ஆ. ராசாவின் நெருங்கிய நண்பருமான சாதிக் பாஷா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதப்படுகிறது. இன்றுவரை விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வியாகவே அவரது மரணம் நீடிக்கிறது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சாதிக் பாஷாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதில் திமுகவிற்கு பெரிய பங்கு உண்டு என அப்போது வைகோ குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக ஆதாரம் வெளியிட தயார் என வைகோ அன்று ஆவேசமாக கூறினார்.மேலும், திமுக தலைவர் மு.கருணாநிதியை காப்பாற்றவே சாதிக் பாஷா கொல்லப்பட்டதாக கூறிய வைகோ, ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் எனக் கூறினார். 2ஜி ஊழலில் பெறப்பட்ட பணம் பெட்டி பெட்டியாக அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக குற்றம்சாட்டிய வைகோ இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர போவதாக வைகோ கூறினார்.

இப்படி சாதிக் பாஷாவின் மரணத்தில் திமுக குற்றம்சாட்டிய வைகோ, தற்போது நடக்கயிருக்கும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
இந்நிலையில், சாதிக் பாஷாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 16ம் தேதி, “கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே” என்றும், இப்படிக்கு உன் முகம் கூட அறிந்திடா உன் பிள்ளைகள் என்றும் நாளிதழ்களில் அவரது குடும்பத்தினர் விளம்பரம் செய்தனர். திமுகவில், அதுவும் ஆ.ராசாவின் நண்பராக இருந்த சாதிக் பாஷா, அந்த நட்பின் காரணமாகவே உயிரைவிட்டது போல், அவருடைய குடும்பத்தினர் கூறியிருந்ததால், இந்த விளம்பரம், பல தரப்பிலும், மிகுந்த கவனத்தை பெற்றது.

இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கும் வைகோ, தற்போது ஸ்டாலினை என் அன்பு தம்பி என்று கூறி கூட்டணி சேர்ந்து விட்டார். கூட்டணி சேர்ந்தாலும், இன்றும் திமுகவிடம் சாதிக் பாஷா மரணத்திற்கு நியாயம் கேட்பாரா வைகோ…

Exit mobile version