தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ளது. இந்த தீர்ப்பில் வைகோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 1 வருட சிறை தண்டனையும் 10000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version