வைகை, நொய்யல் ஆறுகளைச் சீரமைக்க ரூ.9.04 கோடி நிதி ஒதுக்கீடு

வைகை, நொய்யல் ஆறுகளைத் தூர்வாரிச் சீரமைப்பதற்கு 9 கோடியே 4 லட்ச ரூபாயைத் தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பாயும் வைகை ஆறு, கோவை மாவட்டத்தில் பாயும் நொய்யல் ஆறு ஆகியவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண்வளத்தைக் காக்கவும், மரங்கள் வளர்க்கவும், பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டவும் திட்டமிட்டு நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு 2017 -2018 நிதியாண்டில் 7 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018 – 2019 நிதியாண்டில் 8 கோடியே 23 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் இந்த திட்டத்துக்காக 9 கோடியே 4 லட்ச ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நிதியில் வைகை ஆற்றுக்கு 6 கோடி ரூபாயும், நொய்யல் ஆற்றுக்கு 3 கோடி ரூபாயும் செலவிடப்படும்.

Exit mobile version