நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் 2001ல் வெளியான திரைப்படம் ப்ரண்ட்ஸ். இதில் நடிகர் வடிவேலுவின் காமெடி அவரது கேரியரில் மற்றுமொரு மைல்ஸ்டோனாக அமைந்தது. இன்றளவும் நம்மால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதில் ஒரு காட்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா எதிர்பாராதவிதமாக வடிவேலு தலையில் சுத்தியலை போட்டு விட இதனால் வடிவேலு மயக்கமடையும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பேஸ்புக்கில் இருதினங்களுக்கு முன்பு civil engineers learners என்ற பக்கம் சுத்தியலின் படத்தை பதிவிட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? என கேட்டது. அதன் கீழ் இருவர் நடிகர் வடிவேலுவின் காண்டிராக்டர் நேசமணியை குறிப்பிட்டு காமெடியாக கமெண்ட் செய்திருந்தனர்.
இந்நிலையில் மயங்கிய வடிவேலுவை காப்பாற்றும் பொருட்டு இன்று காலை முதல் ட்விட்டரில் #Prayfornesamani என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவியது. சொல்லப்போனால் வைரலாக பரவியது. காலையில் இந்திய அளவில் 5ம் இடம் பெற்ற #Pray_for_Neasamani ஹேஸ்டேக் நேரம் செல்ல 2ம் பிடித்தது. 18 வருடங்கள் கழித்து நேசமணியை(வடிவேலு) காப்பாற்ற நினைக்கும் ரசிகர்களின் பொறுப்புணர்ச்சி வடிவேலு ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் “முடியல”.
last reaction of neasamani?#Pray_for_Neasamani pic.twitter.com/tiH4mUZqCQ
— ashwin raj (@ashwinraj21) May 29, 2019
Pray for contractor Nesamani #Pray_for_Neasamani #Vadivelu4Life pic.twitter.com/24GmKbdTo6
— Vasanth Mirsha (@MirshaVasanth) May 29, 2019
புதுப் புரளி … #Pray_for_Neasamani https://t.co/gfnYirMjn6
— Sindhan (சிந்தன்) (@sindhan) May 29, 2019
#Pray_for_Neasamani get well soon Nesamani ? pic.twitter.com/aGsENbd7AP
— Aravind (@aravind_rckz) May 29, 2019