கரூரில் முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கம்பீரமாக நின்று விளையாடிய காளைகளை காளையர்கள் அடக்க முயன்றதை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளைகள், ஊர்வலமாக போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டது. களத்தில் இறக்கப்பட்ட முதல் காளைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. ஒரு வட்டத்தினுள் இறக்கப்படும் காளையின்
கழுத்திலோ அல்லது கொம்பிலோ கட்டப்பட்ட பரிசுப் பொருட்களை எடுக்கும் வீரரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

Exit mobile version