காலை 5 மணி முதல் காத்திருந்தும் ஏமாற்றமே மிச்சம் : தடுப்பூசி தட்டுப்பாடு!

சென்னையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை 5 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து காணப்பட்ட போது தடுப்பூசி போதிய அளவு இருந்தன.

ஆனால், தற்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரும் போது, மருந்து இல்லை என ஏமாற்றத்துடன் திரும்பக் கூடிய சூழ்நிலையே நிலவி வருகிறது.

காலை எவ்வளவு தான் சீக்கிரம் சென்றாலும், 100 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ளவர்கள் திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version