தமிழ்நாட்டில் சென்னை உட்பட 4 சுகாதார மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, பூந்தமல்லி ஆகிய 4 சுகாதார மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. நெல்லையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், பூந்தமல்லியில், அரசு மருத்துவமனை, நேமம் பொது சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.