18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆன்லைனில் இன்று முதல் முதல் முன் பதிவு

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக ஆன்லைனில் இன்று முதல் முதல் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவல் 2 ஆம் ஆலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேவேலை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தருப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் 18 வயது அடைந்தோர் மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. வைத்து பதிவு செய்து கொண்ட பின் எந்த மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று குறுஞ்செய்தி வரும்.

அதன் படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version