கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி பரிசோதனை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக பல்வேறு உலக நாடுகள் நிதி ஒதுக்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக்ஸ், கொரோனாவுக்கு எதிரான வலிமையான தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை விலங்கின் மீது ஆராய்ச்சி செய்ததில் நேர்மறையான முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த கொரோனா வைரஸ் மனித உயிரணுவுடன் பிணைந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசி மூலம் மனித செல்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீண்ட பாதுகாப்பை வழங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில், முதற்கட்ட பரிசோதனை தொடங்க உள்ளதாகவும், இவை வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version