கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் கரையைக் கடந்தபோது, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்ததந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடுமையான சேதத்தை சந்தித்த திருவாரூர் மாவட்டத்திலும், மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post