விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய, இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன… 

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 93 புள்ளிகளுக்கு சரிந்து, 39 ஆயிரத்து 208 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி 10 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 11 ஆயிரத்து 654 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலகப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 162 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 163 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 648 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 747 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான NIKKEI, 22 ஆயிரத்து 548 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 765 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 936 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version