கடலூரில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்திய நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள், அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஆண்டுதோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் வாழும் இஸ்லாமியர்கள், இந்த ஆண்டும் புனித ஹஜ் பயணத்தை, அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் விண்ணப்பித்து செல்ல உள்ளனர். ஹஜ் பயணம் செல்வோருக்கு, நோய்த் தாக்கம் ஏற்பட்டுவிடாமல் இருக்கும் வகையில், தடுப்பூசி போட்டு அனுப்புவது வழக்கத்தில் உள்ள ஒன்று. அந்த வகையில், இன்று கடலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில், தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புனிதப்பயணம் மேற்கொள்ளும் 680க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு, நோய் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.