பிரதமர் நரேந்திர மோடியின் குர்தாவின் அளவு எப்படி மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு எப்படி தெரியும் என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அண்மையில் நேர்காணல் நடத்தினார். அப்போது அரசியல் தவிர்த்து பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் சகோதரி மமதா பானர்ஜி, தனக்கு ஆண்டு தோறும் ரசகுலா மற்றும் குர்தா ஆகியவற்றை அனுப்பி தருவதாக கூறினார். இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் பிரபலமான ரசகுல்லா மற்றும் குர்தா ஆகியவற்றை மமதா பானர்ஜி தங்களுக்கு பரிசு அளிக்காமல் ஒருவருக்கு மட்டும் அளித்து வருவதாக கூறினார். மேலும் பிரதமர் மோடியின் குர்தாவின் அளவு மமதா பானர்ஜிக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.