மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடி மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.
நக்சலைட், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். உத்தரகாண்டில் 41. 27 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.