தமிழக இளைஞரை சென்னை வந்து கைது செய்த உத்தரப்பிரதேச காவல்துறை

வடமாநிலங்களில் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த, தமிழக இளைஞரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர் டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட வடமாநிலங்களில் பல பேரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். அங்கிருந்து  தப்பி வந்து  சென்னை போரூரில் தங்கியிருந்த கார்த்திகேயனை உத்தரப்பிரதேசம் காவல்துறையினர் தேடி வந்து  கைது செய்துள்ளனர். இதனிடையே அவரை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை விமானநிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து கார்த்திகேயனுக்கு சென்னை விமானநிலைய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் டெல்லி கொண்டு செல்லப்பட்டார்.

Exit mobile version