உத்தரப்பிரதேசம் உன்னாவு மாவட்டத்தில் நிலத்துக்குக் கூடுதல் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் சிலர் கான்கிரீட் கலவை எந்திரம் மற்றும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
உத்தரப்பிரதேசம் உன்னாவு மாவட்டத்தில் டிரான்ஸ் கங்கா சிட்டி திட்டத்துக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்குக் கூடுதல் இழப்பீடு கோரி விவசாயிகள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடிக்கச்செய்தும் தடியடி நடத்தியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். அந்த இடம் முழுவதையும் மாவட்ட நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக அறிவித்ததுடன் அங்குக் கட்டுமானப் பணிகளையும் தொடங்கியது. இந்நிலையில் அங்கிருந்த கான்கிரீட் கலவை எந்திரம், வாகனங்கள் ஆகியவற்றைச் சிலர் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.