பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில், ஆழித்தோரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 96 அடி உயரமும், 400 டன் எடை கொண்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரில் உற்சவர் தியாகராஜ சுவாமி அஜபா நடனம் ஆடியபடி, எழுந்தருளினார். மாவட்ட ஆட்சியர் சாந்தா, தேரோட்டத்தை தொடக்கி வைக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.