திருப்பூர் மாவட்டத்தில் விஞ்ஞானி ஒருவர் பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படும் ஹைட்ரஜன் இன்ஜினை கண்டிபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை செர்ந்தவர் விஞ்ஞானி சவுந்தரராஜன் குமாரசாமி. 11 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த இவருக்கு பதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். இந்நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்தும் சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜினினை’ கண்டுபிடித்து அவர் சாதனை படைத்துள்ளார். இந்த இன்ஜினை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜன் மட்டுமே வெளியே வரும் என்பதும் தேவைப்படும் ஹைட்ரஜனை இன்ஜினே தயாரித்துக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானே வியக்கும் அளவிற்கு உள்ள கண்டுபிடிப்புக்காக விஞ்ஞானி சவுந்தரராஜனின் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தனது கண்டுபிடிப்புகளை அரசு அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.