ஜம்மு காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி வருவதாகவும், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில், அனைத்து தரப்பினரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டாகஸ், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தொடர்பாகவும், அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் இந்திய அரசின் முடிவையும் தாங்கள் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் காவலில் இருப்பது குறித்து அக்கரை தெரிவித்துள்ளதோடு, அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில், அனைத்து தரப்பினரும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.