யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடக்கம்!

இந்தாண்டு நடக்கும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் அனைத்து போட்டிகளும் பார்வையாளர்கள் இன்றி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை நியூயார்க் நகரில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு சர்வதேச போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், யு.எஸ்.டென்னிஸ் தொடர் நடைபெறுவது குறித்து கேள்வி எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவெடிக்கப்பட்டது. வீரர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்வோமோ (Andrew cuomo), டென்னிஸ் வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அதன்படி, அனைவருக்கும் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், தொடர்ச்சியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் சமூக இடைவெளியுடன் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version