அமெரிக்க உளவுத்துறை தலைவர் பதவியை டான் கோட்ஸ் திடீர் ராஜினாமா செய்தார்

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியான டான் கோட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியாக டான் கோட்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடிதத்தில் எனது பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது. எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் மாதத்தில் டான் கோட்ஸ் பதவி விலகுவார் எனவும், அதன் பின்னர் அந்த பதவிக்கு டெக்சாஸ் மாகாண எம்.பி. ஜான் ராட்கிளிப் பரிந்துரை செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார். 

Exit mobile version