அமெரிக்காவில் பிரபல ராப் பாடகரை சுட்டுக்கொன்ற கொள்ளை கும்பல்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக் கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தவர் பிரபல ராப் பாடகர் பாப் ஸ்மோக்,  இவர் வீட்டில் தனியாக இருந்த போது கொள்ளை கும்பல் ஒன்று இவரின் வீட்டில் புகுந்துள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்மோக், கொள்ளை கும்பலை விரட்டியடிக்க முயன்றுள்ளார். அப்போது கொள்ளையர்கள் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பின்னர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் திரளவே கொள்ளையர்கள் தப்பியோடினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் பாப் பாடகர் ஸ்மோக்கிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version