அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கியது

அமெரிக்காவில், பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், அதன் பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்தன.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹாபர்ஸ் ஃபெர்ரி தேசியப் பூங்கா பகுதியில் இருந்து சரக்கு ரயில் ஒன்று கார்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அந்த ரயில் போட்டோமேக் நதியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயில் பெட்டிகள் பக்கவாட்டில் சரிந்து, திசைக்கொன்றாக விழுந்து நொறுங்கின. கார்களுடன் இருந்த சில ரயில் பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்து முழ்கியது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version