அமெரிக்க செனட் சபைக்கான இடைக்காலத் தேர்தலில் 3 இந்தியர்கள், இரண்டு இஸ்லாமியர்கள், ஒரு திருநங்கை ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபைக்கும், 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் 4 இந்தியர்கள் மீண்டும் போட்டியிட்டனர். இதில், கண்ணா, ராஜாகிருஷ்ண மூர்த்தி மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கிறிஸ்டியன் ஹால் குஸ்ட் என்ற திருநங்கையும் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல ரஷிதா தலாப், மற்றும் இலன் ஓமர் ஆகிய இரண்டு முஸ்லீம் பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், இலன் ஓமர் சோமாலிய அகதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ கார்டஸ் என்பவர் வெற்றி பெற்றதையடுத்து, இளம் வயதில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். ஜெரெட் பொலிஸ் என்பவர் வெற்றி பெற்றதால், ஓரின சேர்க்கையாளரான ஒருவர் கவர்னராக பதவியேற்பது அந்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.