அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை மைக் பாம்பியோ டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வேண்டுகோள் விடுத்தார். மேலும் ரஷ்யாவிடமிருந்து S-400 ரக ஏவுகணைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமெரிக்கா முன் வைத்ததாக கூறப்படுகிறது. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மைக் பாம்பியோ, பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.