வர்த்தக முன்னுரிமை விவகாரத்தில் ஆலோசனை மூலம் சுமூக தீர்வு எட்டப்படும்: இந்தியா

இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமையை அமெரிக்கா ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், இரு தரப்பு ஆலோசனைக்கு பிறகு சுமூகமான முடிவு எட்டப்படுமென இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி வித்திக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா, அமெரிக்காவுடன் முக்கியத்துவமான வர்த்தக உறவை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் தற்போதைய முடிவு காரணம் இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதாகவும், மற்ற நாடுகளுடன் இந்தியா கடைபிடிக்கும் வர்த்தக உறவையே அமெரிக்காவிடமும் கடைபிடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சரியான நேரத்தில் தீர்வு காணப்படும் என்றும், அதுவரையில் அமெரிக்காவுடன் வர்த்தக உறவை கட்டமைக்கும் செயல்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version