ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ஆணையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

ஈரான் – அமெரிக்க இடையே அணு ஆயுதம் தடை ஒப்பந்தம் தொடர்பாக சச்சரவு நிலவி வருகிறது. இந்தநிலையில், ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு அதை கடைசி நேரத்தில் திரும்ப பெற்றார்.

இதனையடுத்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது. மேலும் ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எந்த நாட்டுடனும் மோதல் போக்கை அமெரிக்கா விரும்பவில்லை என தெரிவித்தார்.

Exit mobile version