அகதிகள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அமெரிக்காவில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஊடுருவல்காரர்கள் என அவர் விமர்சித்தார். இது பற்றி சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளர் அகஸ்டா கேள்வி கேட்க முயன்றார். இதற்கு பதிலளிக்க மறுத்த டிரம்ப், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அமெரிக்காவை நிர்வகிக்க விடுங்கள் என்றும், நீங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தை மட்டும் கவனியுங்கள் என்றும் அவர் கோபமாக பதிலளித்தார். மேலும் கோபமடைந்த டிரம்ப், பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
அப்போதும் அந்த நிருபர் தொடர்ந்து கேள்வி கேட்டதால், நீங்கள் வாயைத் திறக்கக் கூடாது என டிரம்ப் அதிகாரத்தோடு உத்தரவிட்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.