இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு!

 டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்க உள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உதவிகரமாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரசை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், அமெரிக்காவும், இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Exit mobile version