பாகிஸ்தானின் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேச முயன்ற இம்ரான்கானின் பேச்சை டிரம்ப் காமெடி செய்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு தலைநகர் நியூயார்க்கில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது அண்டை நாடுகளுடனான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரானுடான பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என இம்ரான்கான் பேசினார். இதைக்கேட்ட டிரம்ப் லேசாக புன்னகைத்ததுடன், சிறந்த நண்பர்களை அண்டை நாடுகளாக கொண்டுள்ளீர்களே எனக் கூறினார். இதை எதிர்பாராத இம்ரான்கான் மேற்கொண்டு பேசமுடியாமல் சமாளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.