அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: ரபேல் நடால் 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரன அமெரிக்க ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்லேனை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6 க்கு 3, 6 க்கு 3, 6 க்கு 2 என அடுத்தடுத்து 3 செட்களையும் கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version