பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 25 பேர் பலி

ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் போர்க்குழுத் தளபதி காசிம் சுலைமான் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின்மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையத்தில் ஈரான் போர்க்குழுத் தளபதிகள் வந்த வாகனங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 2 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. அதில் இருந்த ஈரான் போர்க்குழுத் தளபதி காசிம் சுலைமான் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் வான்பரப்பின் மீது விமானங்களை இயக்க வேண்டாம் என அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்தால் அவற்றின் மீது தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version