ஈரான் மீது அமெரிக்க ராணுவம் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் கடற்பரப்பில் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, புதிய தடைகளை விதித்துள்ளது. யாருடனும் தாங்கள் சண்டையிட விரும்பவில்லை என்றும், ஆனால் வான் எல்லைகளுக்குள் அந்நிய நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனிடையே ஈரானின் ஆயுத கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது அமெரிக்க ராணுவம் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த அனுமதி அளித்ததாகவும், இதன்மூலம் ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டுக் கணினிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.