துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

ரஷ்யாவுடன் ராணுவ வர்த்தகத்தை ரத்து செய்யாததால், துருக்கி மீது பொருளாதரத்தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது

ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்க துருக்கி அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இதை ரத்து செய்யக்கோரி அமெரிக்கா துருக்கிக்கு வலியுறுத்தி இருந்தது. மேலும் ஒப்பந்ததை ரத்துசெய்யாவிட்டால் ரஷியாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் அனைத்து நாடுகளின் மீதும் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது அமெரிக்க அரசு. இந்நிலையில் , ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக ஒப்பந்தமான எஸ்-400 ரக வான்வெளி ஏவுகணைகளில் முதல் ஏவுகணையை துருக்கி பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, துருக்கி மீது இன்னும் ஒருவாரத்திற்குள் பொருளாதாரத்தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version